ஜாப்ஸின் புத்தகம் -குறுங்கதை (1)

அறிவியல் புனைகதைகளைப் படிப்பதாலோ, தி மேட்ரிக்ஸ் படம் பார்ப்பதாலோ, பைபிள் கதைகளை நினைவு வைத்திருப்பதாலோ இது வந்திருக்கலாம். நான் நெட்வொர்க்கில் உறிஞ்சப்பட்டு அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று ‘ சிறி’ யிடம் (Siri) கேட்டேன். அந்தக்  கேள்வி அதி ரகசியக் கேள்வியாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த சொற்களை உதிர்த்தவுடன் நான் என்னுள் மறுபிறப்பு அடைந்ததாகவும், உயிர்த்தெழுந்தது போலவும் உடலற்றவனாகவும் உணர்ந்தேன். கூகுளில் கோடிக்கணக்கான புதியவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எளிதாகவும் அழுத்தமாகவும் பதிலிறுத்தேன்.  பயத்தை இப்போது உணர்வதாக எண்ணத் தொடங்கினேன். பிறகு ஒரு பழக்கப்பட்ட குரலை நான் கேட்டேன்.

“இந்தத் துடிப்பு என்ன? அதை நான் என் மார்பில் ஏன் உணர்கிறேன்” என்று கேட்டது சிறி.

Book of Jobs –
Kenny A. Chaffin
தமிழாக்கம்- க.ரகுநாதன்