தூய்மை- குறுங்கதை (3)

“ஏன், எப்போ பார்த்தாலும் உன் பூனை என்னை ரொம்ப நக்குது” என் மீதமர்ந்து கொண்டிருந்த பூனையிடமிருந்து கையை விலக்கிக் கொண்டே கேட்டேன்.

“மரணமடைவதற்கு முன்பு பூனைகள் தங்கள் உடலை நக்குவதன் முலம் தூய்மைடைவதால் அம்மிட் எனும் முதலைக் கடவுளால் விழுங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று எகிப்தியர்கள் நம்புவதாக இணையத்தில் படித்திருக்கிறேன்” – புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பாமலே கூறினாள்.

‘‘நல்லது…அவளை தள்ளிப் போகச் சொல்லு. நான் இப்போதைக்கு சாகற மாதிரி தெரியலை..’’ சிறிதாகப் புன்னகைத்தேன். பின்னர் பூனையின் கண்களுக்குள் சிக்குண்டு என் கைகளை அதன் வாயருகே வைத்தபடி “வேலையைப் பார்” என்று அதனிடம் கிசுகிசுத்தேன்.

Cleanliness by Brad Nelms
தமிழில்- க.ரகுநாதன்