மீன் பிடிக்கையில்… – குறுங்கதை (2)

ஒரு நாள் தண்ணீரில் சிவந்த உதடுகளைக் கொண்ட ஒரு மீனைக் கண்ட நான் அதனைப் பிடித்து முத்தமிட்டேன். அப்போது அந்த மீன் அழகியாக மாறி, என் மூச்சினை திருடிக் கொண்டது. காற்றுக்காக நான் மூச்சு முட்டி திணறியும் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. அவள் என்னை எடுத்து தண்ணீருக்குள் தூக்கி எறிந்தாள். அங்கு ஒரு தூண்டில் புழு என்னைத் தூண்டும் வரையில் எனக்கு செதில்களும் துடுப்புகளும் வளர்ந்தபடியிருக்கவே நான் சிறு மீன்களைத் தின்று கொண்டிருந்தேன். என் கணிப்புத் தவறும் வகையில் நான் அந்த புழுவைக் கடித்த நேரம் தண்ணீரிலிருந்து கரைக்குத் தூக்கி எறியப்பட்டு, மீண்டும் மூச்சுத் திணறித் துடித்தேன். அங்கு மீன் தூண்டிலுடன் நின்றிருந்தது அவள்தான்.

Gone Fishing- by Rachel Warren
தமிழில்- க.ரகுநாதன்