சாத்தாளின் அருள் மாளிகை

கடவுளா சாத்தாளா என்ற கேள்வி  எழுந்தபோது ஒரு நீலப்படம் பார்ப்பது என அவர்களுக்குள் முடிவானது. புழுதி பறந்த தார்ச்சாலையைக் கடந்து தலை மறைத்துச்  சென்ற இடத்தில் மழை குடித்து வெயில் தின்ற சுவரில் முதலில்  தொங்கியது சாத்தாளின் அந்தரங்க அருள் மாளிகை. சாத்தாளைத் தரிசிக்க வயதுக் கணக்கை கேட்டவனிடமிருந்து விரல்களால் வரைந்து பெற்ற வரைபடத்தில் நுழைந்தபோது…

வான்காவின் கண்

மஞ்சள், சிவப்பு, பச்சை நீலம், வெள்ளை, கறுப்பு என விழுந்து கிடந்தவனைப் பார்த்து காதலித்தவனா என்றாள். காதலித்ததால் காதழித்தவன் என்றேன். ஓவியமெங்கும் ரத்தம் வடியும் கண்களாயின.  நன்றி: உயிரோசை