அகடுஆரப் புல்லி முயங்குவேம்!

நல்லுடல் வாய்த்தவர்களுக்கு மட்டுமல்ல, மாற்றுத் திறன் கொண்ட ஊனமுற்றோருக்கும் காதல் வாழ்க்கை உண்டு. அன்பு கொண்ட அந்த மனங்களுக்கு என்றும் இல்லை மணத்துக்குத் தடை என்பதைக் கூறும் ஒரு பாடல் கலித்தொகையில் (மருதக்கலி:- பா.28) காணப்படுகிறது. தலைவன், தலைவி தத்தம் உடற்குறையை சீண்டிக் கொள்ளும் இந்தப் பாடல், மருதன் இளநாகனார் இயற்றியது. “என் நோற்றனை கொல்லோ? நீருள்…