ஒரு கிராமத்திற்கு இரு ஆண்கள் வந்தடைந்தனர்

சில சமயங்களில் குதிரையின் மீது, சில நேரம் கால்நடையாக, காரில் அல்லது மோட்டார் பைக்குகளில், எப்போதாவது டாங்குகளில், அவ்வப்போது ஹெலிகாப்டர்களின் மூலமும் தங்களதுபடைப்பிரிவிலிருந்து வழி தவறி தொலைதூரம் கடந்து இரு ஆண்கள் வந்தடைகிறார்கள். ஆனால் நாம் நிகழக்கூடிய சாத்தியங்களின்படி பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் நடந்தே வருகிறார்கள் என்பதை குறைந்தபட்சம் இந்த முறையாவது ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.…

ஏழு குறுங்கதைகள்

“கரடி வேடம் போட்டவனின் வாழ்விலே ஒரு நாள்…சுட்டு விடாதே என்றான்” – உலகின் மிகச் சிறிய கதை எனக் கூறுவர்.  எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகப் புகழ்பெற்ற ஆறு சொற்கள் கொண்ட ஒரு வரிக் கதை: “விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள், அணியவே இல்லை” (For sales: baby shoes, never worn). இக்கதையின் சொல்லவொணாத் துயரம் மீண்டும் மீண்டும் ஒரு கலைடாஸ்கோப்பில் மாறி…

மொழிபெயர்ப்புப் பார்வைகள்

எல்லா இலக்கிய வடிவங்களும் மொழிபெயர்ப்பே. சில ஒலிபெயர்ப்புகளாக அமைகின்றன. புனைவுகள், அபுனைவுகள் அனைத்தும் மனதில் ஓடும் கற்பனையின் ஒலிபெயர்த்த மொழிபெயர்ப்பு வடிவங்களே. குழந்தை மழலையில் உதிர்க்கும் ஒலிகளை பட்டாம் பூச்சி பிடிக்கும் சிறுவனைப் போல் விரட்டிப் பிடித்து, புரிந்து அதனை திரும்பச் சொல்லும் தாயிடம் துவங்குகிறது இந்த மொழிபெயர்ப்புப் பணி. இலக்கியத்தில் மொழிபெயர்ப்பின் இடம் மிக…

தூய்மை- குறுங்கதை (3)

“ஏன், எப்போ பார்த்தாலும் உன் பூனை என்னை ரொம்ப நக்குது” என் மீதமர்ந்து கொண்டிருந்த பூனையிடமிருந்து கையை விலக்கிக் கொண்டே கேட்டேன். “மரணமடைவதற்கு முன்பு பூனைகள் தங்கள் உடலை நக்குவதன் முலம் தூய்மைடைவதால் அம்மிட் எனும் முதலைக் கடவுளால் விழுங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று எகிப்தியர்கள் நம்புவதாக இணையத்தில் படித்திருக்கிறேன்” – புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பாமலே கூறினாள்.…

மீன் பிடிக்கையில்… – குறுங்கதை (2)

ஒரு நாள் தண்ணீரில் சிவந்த உதடுகளைக் கொண்ட ஒரு மீனைக் கண்ட நான் அதனைப் பிடித்து முத்தமிட்டேன். அப்போது அந்த மீன் அழகியாக மாறி, என் மூச்சினை திருடிக் கொண்டது. காற்றுக்காக நான் மூச்சு முட்டி திணறியும் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. அவள் என்னை எடுத்து தண்ணீருக்குள் தூக்கி எறிந்தாள். அங்கு ஒரு தூண்டில் புழு என்னைத்…