ஏழு குறுங்கதைகள்

“கரடி வேடம் போட்டவனின் வாழ்விலே ஒரு நாள்…சுட்டு விடாதே என்றான்” – உலகின் மிகச் சிறிய கதை எனக் கூறுவர்.  எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் மிகப் புகழ்பெற்ற ஆறு சொற்கள் கொண்ட ஒரு வரிக் கதை: “விற்பனைக்கு: குழந்தையின் காலணிகள், அணியவே இல்லை” (For sales: baby shoes, never worn). இக்கதையின் சொல்லவொணாத் துயரம் மீண்டும் மீண்டும் ஒரு கலைடாஸ்கோப்பில் மாறி…

தூய்மை- குறுங்கதை (3)

“ஏன், எப்போ பார்த்தாலும் உன் பூனை என்னை ரொம்ப நக்குது” என் மீதமர்ந்து கொண்டிருந்த பூனையிடமிருந்து கையை விலக்கிக் கொண்டே கேட்டேன். “மரணமடைவதற்கு முன்பு பூனைகள் தங்கள் உடலை நக்குவதன் முலம் தூய்மைடைவதால் அம்மிட் எனும் முதலைக் கடவுளால் விழுங்கப்படுவதிலிருந்து தப்பிக்கலாம் என்று எகிப்தியர்கள் நம்புவதாக இணையத்தில் படித்திருக்கிறேன்” – புத்தகத்திலிருந்து பார்வையைத் திருப்பாமலே கூறினாள்.…

மீன் பிடிக்கையில்… – குறுங்கதை (2)

ஒரு நாள் தண்ணீரில் சிவந்த உதடுகளைக் கொண்ட ஒரு மீனைக் கண்ட நான் அதனைப் பிடித்து முத்தமிட்டேன். அப்போது அந்த மீன் அழகியாக மாறி, என் மூச்சினை திருடிக் கொண்டது. காற்றுக்காக நான் மூச்சு முட்டி திணறியும் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை. அவள் என்னை எடுத்து தண்ணீருக்குள் தூக்கி எறிந்தாள். அங்கு ஒரு தூண்டில் புழு என்னைத்…

ஜாப்ஸின் புத்தகம் -குறுங்கதை (1)

அறிவியல் புனைகதைகளைப் படிப்பதாலோ, தி மேட்ரிக்ஸ் படம் பார்ப்பதாலோ, பைபிள் கதைகளை நினைவு வைத்திருப்பதாலோ இது வந்திருக்கலாம். நான் நெட்வொர்க்கில் உறிஞ்சப்பட்டு அவள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டால் என்ன நடக்கும் என்று ‘ சிறி’ யிடம் (Siri) கேட்டேன். அந்தக்  கேள்வி அதி ரகசியக் கேள்வியாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த சொற்களை உதிர்த்தவுடன் நான்…